ஸ்தல பெருமை

குருபரிகாரஸ்தலம்:(பரிகாரபூஜை)

பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ஜாதகத்தில் குரு பலம் பெற பிரம்மதேவன் வணங்கி பேறு பெற்ற ஸ்ரீநிதீஸ்வரப்பெருமானை ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்தால் அவர்களின் தலையெழுத்து மங்களகரமாக மாறி, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கிடும் என்பது ஐதீகம்.

அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக:

தனகாரகனான குருபகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் அல்லது குபேரனுக்கு உகந்த பூச நட்சத்திரம், அட்சய திரிதியை, தீபாவளி ஆகிய நாட்களில் மஞ்சள் வண்ண புஷ்பம் சாற்றி, ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து, தேங்காய், பழம் நைவேத்யம் செய்து தரிசனம் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம், வீடு வாகன யோகம், தொழில்விருத்தி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு பெறலாம், சொத்து மற்றும் நிதிப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் தீரும்.

குழந்தை வரம்:

குழந்தை வரம் வேண்டி வரும் கணவன் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் தேங்காய் பழத்துடன் வெண்ணெய் கொண்டு வந்து ஸ்ரீ கனகதிரிபுரசுந்தரி அம்பிகையை அர்ச்சனை செய்து வழிபட விரைவில் புத்திரபாக்கியம் கிட்டும்.

கல்வியில் உயர்வு பெற:

முழுமுதற்கடவுளான கணபதி இத்தலத்தில் லஷ்மிகணபதியாக அருள் பாலிக்கின்றார். சதுர்த்தி திருநாளில் இவரை வழிப்பட்டால் கல்வியில் உயர்வும், குடும்பத்தில் லஷ்மி கடாஷமும் பெருகும்.

திருமணத்தடை விலக:

செவ்வாய் கிழமைகள், கிருத்திகை, சஷ்டி தினங்களில் தேங்காய் பழத்துடன் இரண்டு மாலைகள் கொண்டு வந்து வள்ளி, தேவசேனா சமேத நித்யகல்யாண சுப்ரமணியரை வணங்கிட களத்திர தோஷம் நிவர்த்தியாகி விரைவில் திருமணம் கைகூடும்.

இரட்டை பைரவர்:

மேற்கு நோக்கி வீற்றிருக்கும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளிலும், தனஆகர்ஷன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி நாளிலும், ஞாயிறு அன்று ராகுகாலத்திலும் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் விரைவில் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், தடைப்பட்ட அனைத்து காரியங்கள் நிறைவேறும்.

ரம்பாதிரிதியை:

பொன், பொருள் விருத்தி அடைய கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாளான ரம்பா திரிதியை அன்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது உகந்தது.

Get in Touch

SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET, WEST SAIDAPET, CHENNAI – 600015

info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com

(+91) 9444036534 / 9444036532

Follow Us

பூஜா சேவாக்கு முன்பதிவு செய்ய

குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்

பதிவு செய்